அந்தியூர், பர்கூர் மலைப்பாதை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் நாளை முதல் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தல்
அந்தியூர், பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடகா செல்லும் 6 சக்கரத்திற்கு மேலான கனரக வாகனங்கள் நாளை காலை முதல் செப்.25-ம் தேதி வரை மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநில எல்லையில் மலைப்பாதையில் 2ம் கட்ட சாலை பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஈரோடு மாவட்ட ஆட்சியர் இவ்வாறு அறிவித்துள்ளார்.