சென்னை: ஒருங்கிணைந்த பொறியல் பணி தேர்வுக்கான விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ.சண்முக சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2.7.2022 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வுக்கான விடைத்தாள்கள் (ஓஎம்ஆர் முறை) தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள், தங்களுடைய ஒருமுறை பதிவு எண் வாயிலாக விடைத்தாளினை உரிய கட்டணம் செலுத்தி, பதிவிறக்கம் செய்யலாம்
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


