சமயபுரம் கோயிலில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி: சமயபுரம் கோயிலில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஓதுவார் பயிற்சி பள்ளியில் 3 ஆண்டு, 4 ஆண்டு சான்றிதழ் படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓதுவார் பயிருக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், 24 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர். முழு நேரம் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பகுதி நேரம் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.