கிருஷ்ணகிரி: சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 46வது ஆண்டு விழாவை முன்னிட்டு 25 மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை நடிகர் சிவகுமார் வழங்கினார். தருமபுரி, விழுப்புரம் பகுதிகளை தொடர்ந்து தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் உள்ள கோடகரை தொடக்கப்பள்ளியில் தன்னார்வலர் ஆசிரியரை நியமித்து கல்வி பணிகளை முன்னெடுத்து வரும் 'வாழை' தன்னார்வ அமைப்பிற்கு ரூ. 1,50,000 நிதி உதவியும் வழங்கினார்.
மூத்த ஓவிய கலைஞர் 'மணியம்' செல்வன் அவர்களின் கலை பங்களிப்பை பாராட்டி அவருக்கு ரூ. 1,00,000 நிதி வழங்கினார். மேலும், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதி மேல்நெல்லிமரத்தூரில் அமைந்திருக்கும் பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி மேம்பாட்டு பணிகளுக்கு ரூ. 40,000 வழங்கினார். இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ரூ. 1,00.000/- நிதி உதவி வழங்கினார்.