டெல்லி: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக எம்எல்ஏ அன்னியூர் சிவா வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யயப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த ராஜமாணிக்கத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனிடையே சிவாவின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் ராஜமாணிக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அன்னியூர் சிவாவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரிய ராஜமாணிக்கம் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் இந்த ராஜமாணிக்கத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
