மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் நீர்நிலை பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அன்னவாசல் பேரூராட்சியில் நீர்நிலை பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி எம்.குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். முலகுளம் கண்மாய் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வரத்தை சரி செய்து தர வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய்த் துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் முலகுளம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து முறையாக அகற்ற உத்தரவிட்டு வழக்கு முடித்து வைத்தது.
+
Advertisement