ஆண்டிபட்டி: தமிழகத்தின் பாஜ மாநில தலைவராக அண்ணாமலை இருந்தார். அதன் பின்னர் அக்கட்சியின் தேசிய தலைமை, நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக நியமித்தது. அதன் பிறகு கட்சியில் முக்கியத்துவம் இல்லாததால் அண்ணாமலை தனிக் கட்சி தொடங்கப் போவதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில், சேலம் மற்றும் நெல்லையில் அண்ணாமலைக்கு ஆதரவாக ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியின் பல்வேறு இடங்களில், அண்ணாமலை பெயரில் அக்கட்சி தொண்டர்கள், ‘‘ரசிகர்கள் சமூக சேவை நற்பணி மன்றம்’’ என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் மன்றத்தில் உறுப்பினராக சேர்வதற்கு அழைப்பும் விடுத்து அதற்கான மொபைல் நம்பரும் கொடுத்துள்ளனர். இதுகுறித்து பாஜ நிர்வாகிகளிடம் கேட்டபோது, அண்ணாமலை மீதுள்ள தனிப்பட்ட விருப்பத்தால் இந்த மன்றத்தை துவக்கி உள்ளதாக தெரிவித்தனர்.
+
Advertisement