பேமெண்ட் கொடுத்தாலும் 30 பேர் கூட வரமாட்டேங்றாங்க... அண்ணாமலைக்கு 3வது இடமே பெரும் சவாலா இருக்கு... பாஜ நிர்வாகிகள் ஆடியோ வைரல்
கோவையை சேர்ந்த பா.ஜ. நிர்வாகி ஒருவரும், மதுரையை சேர்ந்த பா.ஜ நிர்வாகி ஒருவரும் டெலிபோனில் பேசிக்கொள்ளும் பேச்சு, ரகசியமாக பதிவு செய்யப்பட்டு, ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆடியோ, தற்போது சமூக வலைதளங்களில வைரலாகி வருகிறது. அதன் விவரம் வருமாறு:
மதுரை நிர்வாகி: ஹலோ... கார்த்தி எப்படி இருக்கீங்க... நல்லா இருக்கீங்களா?
கோவை நிர்வாகி: நான் நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க...
மதுரை நிர்வாகி: சூப்பரா இருக்கேன்... வேலையெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு..?
கோவை நிர்வாகி: வேலையெல்லாம் எங்கே...ங்க போயிட்டு இருக்கு..?
மதுரை நிர்வாகி: என்னங்க இப்படி சொல்றீங்க...?
கோவை நிர்வாகி: என்ன... வேட்பாளர் வந்தப்ப.... நமக்கு ஒரு நம்பிக்க இருந்தது. இப்பெல்லாம்... ஒன்னும் சரியில்ல... நானும் போயிட்டுதான் இருக்கேன்... முதல்ல 100 பேர் வந்த இடத்துல... இப்போ 30 பேர்கூட வரமாட்டேங்றாங்க...
மதுரை நிர்வாகி: பேமெண்ட் எல்லாம் சரியாத்தானே கொடுக்கிறாங்க...?
கோவை நிர்வாகி: பேமெண்ட் எல்லாம் கொடுக்குறாங்க... ஆனா, கோஷ்டி இருக்குல்ல...! வானதியெல்லாம், பார்தீங்கன்னா..., அவங்க சைடுல இருந்து... ஆள்களையே இறக்குறது இல்ல...
மதுரை நிர்வாகி: வானதி அக்கா, செல்வகுமார் அண்ணன் எல்லாரும் சேர்ந்துதான் வேலை பார்க்குறோம்.. என தலைவர்கிட்ட சொன்னாங்களே?
கோவை நிர்வாகி: செல்வகுமாருக்கு... ஒரு காண்டு....! அவருக்கு சீட் கிடைக்கலை...ன்னு...! இந்த அக்கா... ஒரு பக்கம் இழுக்குது...
மதுரை நிர்வாகி: அதுக்கா... எல்லாருக்கும் சீட் கொடுக்க முடியுமா? கட்சியை விட்டுக்ெகாடுக்க முடியுமா...
கோவை நிர்வாகி: அது உண்மைதாங்க... நமக்கு தெரியுது.... நாம... கொள்கை... அது... இதுன்னு... சுத்துறோம்...! ஆனா, அவங்க... நான்தான் பெரிய ஆளு... நீதான் பெரிய ஆளு... என காட்டிக்கிறதுக்கு... அவங்களுக்கு உள்ளே அடிச்சுக்கிறாங்க...! கட்சி தலைவரையே தோற்கடிக்கணும்...ன்னு நினைக்கிறாங்க...!
மதுரை நிர்வாகி: நாங்கல்லாம்... தலைவர் மட்டும்தான் ெஜயிப்பாரு...ன்னு பேசிக்கிட்டு இருக்கோம்...! தமிழ்நாட்டுல... தலைவர் மட்டும் ஜெயிச்சால் போதும்ன்னுதான் இருக்குது...! எங்க ஏரியாவுலயும் அப்படித்தான் இருக்குது...! இங்கே, நான் நம் அண்ணன்கூட போயிட்டுதான் இருந்தேன்...
கோவை நிர்வாகி: யாரு... கூட..,.?
மதுரை நிர்வாகி: புரபொஸர்கூட...
கோவை நிர்வாகி: அப்படீங்களா... அவரு... நல்லா பேசுவாருங்களே...?
மதுரை நிர்வாகி: அதுல்லாம் ஒன்னும் குறை கிடையாது... எல்லா இடத்துக்கும் நல்லாதான் போறாப்ல..! என்னன்னா..? போக்சோ வழக்குல நம்ம ஆளு ஒருத்தரு மாட்டிகிட்டாரு.... தெரியுங்களா...?
கோவை நிர்வாகி: ஆமா... ஆமா... தெரியும்....
மதுரை நிர்வாகி: அதில... அண்ணனுக்கும் (அண்ணாமலை) தொடர்பு இருக்கும்ன்னு பேசிக்கிறாங்க...! நமக்கெல்லாம் மனசு விட்டுப்போச்சு....! ஏன்னா... நமக்கும், குழந்தை, குட்டிங்க இருக்கிறாங்க...
கோவை நிர்வாகி: கண்டிப்பா.... அதெல்லாம் நாம விட்டு கொடுக்க கூடாது....
மதுரை நிர்வாகி: மற்ற பிரச்னைன்னா பரவாயில்லை... ஒரு அடிதடி வழக்குன்னாலும் பரவாயில்லை... யாருங்க இப்ப பிரச்னை பன்னாம இருக்கிறா...? ன்னு சொல்லலாம்.
கோவை நிர்வாகி: எல்லா கட்சிகாரனுங்களும் இப்ப பிரச்னையிலதான் இருக்கானுங்க... ! பிரச்னை பன்னாத கட்சிக்காரங்க கிடையாது...
மதுரை நிர்வாகி: அதெல்லாம் பிரச்னை கிடையாது... ஆனா, நமக்கு போக்சோ வழக்குன்னு சொன்னதும் மனசு ரொம்ப உடைஞ்சு போச்சு... 18 வயதுக்கு கீழ்... அந்த பிள்ளைங்க... பாவம்...! அதுல போய்... நம்ம ஆளுங்க மாட்டிக்கிட்டாங்க... இதுல... நம்ம வேட்பாளரை வேறு சொல்றாங்க.... அவரு, வேட்பாளரா வேறு இருக்கிறாரு... ! நம்ம ஓட்டு கேட்டு போறதுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு...! அதுல இருந்து நான் போறத குறைச்சிட்டேன்...!
கோவை நிர்வாகி: இங்க பார்த்தீங்கன்னா.... மூன்றாவது இடமே... அதுவே.. பெரிய சவாலா இருக்கு... !
இவ்வாறாக உரையாடல் முடிகிறது.