சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் அண்ணாவின் 117வது பிறந்தநாளான வரும் 15ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் எனது தலைமையில், தலைமை நிர்வாகிகளுடன் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளேன். இதில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
+
Advertisement