சென்னை: மதிமுக முன்னாள் துணை பொது செயலாளர் மல்லை சத்யா ஏற்பாட்டில் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா, திராவிட ரத்னா விருது வழங்கும் விழா, திராவிட இயக்கம் உதயமான திருநாள் ஆகிய முப்பெரும் விழா காஞ்சிபுரத்தில் இன்று நடக்கிறது.
இதில் முன்னாள் எம்எல்ஏ திருப்பூர் சு.துரைசாமி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத், திருவள்ளூர் மாவட்டம் முன்னாள் செயலாளர் செங்குட்டுவன், புலவர் செவ்வந்தியப்பன், அழகு சுந்தரம், பக்ரைன் நாட்டைச் சார்ந்த வல்லம் பஷீர், இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த விசாகன், வாசுகி பெரியார்தாசன் ஆகியோர் திராவிடர் ரத்னா விருது விருது பெறுகிறார்கள். முடிவில் மல்லை சத்யா நிறைவு உரை ஆற்றுகிறார்.