புதுடெல்லி: ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் பெற்ற வங்கி கடன்களை கையாடல் செய்தது மற்றும் பண மோசடி செய்தல் தொடர்பாக சிபிஐயால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சிபிஐ வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானியின் ரூ.7,500 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அம்பானியின் மும்பையின் பாலி ஹில்லில் உள்ள வீடு உட்பட அவரது குழும நிறுவனங்களின் பிற குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நான்கு தற்காலிக உத்தரவுகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். டெல்லியில் மகாராஜ ரஞ்சித் சிங் மார்க்கில் உள்ள ரிலையன்ஸ் மையத்திற்கு சொந்தமான நிலமும், தேசிய தலைநகர் நொய்டா, காசியாபாத், மும்பை , புனே, தானே, ஐதராபாத் , சென்னை மற்றும் கிழக்கு கோதாவரியில் உள்ள பல சொத்துக்களும் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.7,500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
+
Advertisement 
 
 
 
   