லுவாண்டா: அங்கோலா நாட்டில் நடந்த நட்பு ரீதியிலான கால்பந்தாட்ட போட்டியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியும், அங்கோலா அணியும் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய மெஸ்ஸி, லுவாடாரோ மார்டினெஸ் தலா ஒரு கோல் போட்டு அசத்தினர்.
கடைசியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது. போர்ச்சுகல் நாட்டிடம் இருந்து அங்கோலா விடுதலை பெற்று 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் நடந்த நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக, அரஜென்டினா அணிக்கு, ரூ.100 கோடி வழங்கப்பட்டதாக தெரிகிறது.


