நெல்லை: நெல்லை டவுன் கண்டியபேரியில் உழவர்சந்தை அருகே உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தில் கடந்த 20ம் தேதி இரவு மர்ம நபர்கள் இரு பெட்ரோல் குண்டுகளை வீசி வெடிக்கச்செய்தனர். இதை அவர்கள் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் ஆக வெளியிட செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து அங்கன்வாடி மையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி செல்போனில் வீடியோ எடுத்த மர்ம நபர்கள் யார் என விசாரித்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டது டவுன் தடிவீரன்கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன் (22) உள்ளிட்ட இருவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அய்யப்பனை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் மீது டவுன் போலீசில் நபல்வேறு வழக்குகள் உள்ளன. அவருடைய கூட்டாளியை நேற்று போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


