Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆண்ட்ரியா துவங்கி வைக்கும் "கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025" !

பல்லடம் கிளாசிக் சிட்டியில் பிரம்மாண்ட தீபாவளி திருவிழா. “கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025” என்ற பெயரில் அக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்கள் முழுவதும் இசை, நகைச்சுவை, கலாச்சாரம், உணவு, ஷாப்பிங் என அனைத்தையும் ஒரே குடை கீழ் கொண்டு வரும் மிகப்பெரிய திருவிழா நடைபெற உள்ளது. கொங்குநாட்டின் பண்பாட்டு செல்வத்தையும் அதன் மக்களின் உற்சாகத்தையும் பிரதிபலிக்கும். இந்நிகழ்வு குடும்பத்துடன் கலந்து மகிழ ஒரு அபூர்வமான வாய்ப்பாக அமையும்.

இந்த திருவிழாவின் முக்கிய கவர்ச்சியாக பிரபல நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா ஜெரேமியா மேடையேறுகிறார். தனது இனிமையான குரலால் ரசிகர்களை மயக்கும் நேரடி இசை நிகழ்ச்சியை அவர் வழங்கவுள்ளார். இதனுடன் சிரிப்பால் மன அழுத்தத்தை மறக்கச் செய்யும் நகைச்சுவை நிகழ்ச்சியையும் மதுரை முத்து நடத்துகிறார். அவரது தனித்துவமான குரல் மற்றும் நகைச்சுவை பாணி அரங்கம் முழுவதும் சிரிப்பில் மூழ்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் மற்றொரு சிறப்பாக கோவையில் முதன்முறையாக சர்வதேச காத்தாடி திருவிழா நடைபெற உள்ளது. வண்ணமயமான காத்தாடிகள் வானத்தை அழகுபடுத்த, வானம் முழுவதும் பண்டிகை நிறத்தில் மிளிரும். இதை காண்பது பார்வையாளர்களுக்கு ஒரு அரிய அனுபவமாக அமையும்.

அதே நேரத்தில், உணவின் வாசனையால் மனதை கொள்ளை கொள்ளும் உணவு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொங்குநாட்டின் பாரம்பரிய உணவுகள், தீபாவளி சிறப்புக்கள் மற்றும் பல்வேறு சுவையான உணவுப் பொருட்கள் இங்கு சுவைக்கக் கிடைக்கும். அதோடு, உள்ளூர் கைவினைப் பொருட்கள், பிரபல பிராண்டுகள் மற்றும் தனித்துவமான பொருட்கள் அடங்கிய ஷாப்பிங் ஸ்டால்களும் மக்களை கவரும்.

விழா அலங்காரம் மற்றும் விளையாட்டுகளும் பண்டிகை உற்சாகத்தை மேலும் உயர்த்தும். குடும்பத்துடன் கலந்து கொண்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகள் பலவும் உள்ளன. இதன் மூலம், நம் பாரம்பரியம் மற்றும் சமூகம் மீதான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு சமூக விழாவாக இது அமையும்.

இந்த மாபெரும் நிகழ்வை NV Lands என்ற ரியல் எஸ்டேட் மற்றும் சமூக மேம்பாட்டில் முன்னணி நிறுவனமே ஏற்பாடு செய்து வருகிறது. அவர்கள் கொங்குநாட்டின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் புதிய வடிவில் கொண்டாடும் நோக்கில் இந்த திருவிழாவை உருவாக்கியுள்ளனர்.

தீபாவளியின் ஒளியிலும் உற்சாகத்திலும் கலந்துவிட, பல்லடம் கிளாசிக் சிட்டி அக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் உங்களை வரவேற்கிறது. உங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு இசை, சிரிப்பு, சுவை, கலாச்சாரம் அனைத்தையும் ஒரே இடத்தில் அனுபவித்து, உங்கள் தீபாவளியை மறக்க முடியாத நினைவாக மாற்றிக் கொள்ளுங்கள்.