தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முக சுந்தரம் புறம் கிராமத்தை சேர்த்த கோபால கிருஷ்ணன், அன்னலட்சுமி தம்பதிக்கு 4வயதில் அபிதா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று மாலை கணவன், மனைவி கூலி வேலைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் அருகே ஆட்டு கொட்டாய் அமைப்பதற்காக 2 கல் தூண்கள் அமைக்கப்பட்டு அதன் அருகே கயிறு கட்டி துணிகள் காயப்போடபட்டிருந்தது.
அந்த துணியை இழுத்து விளையாடி கொண்டிருந்த சிறுமி அபிதா ஸ்ரீ மீது திடீரென சிமெண்ட் தூண்கள் உடைந்து விழுந்தது.இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட அபிதாஸ்ரீயின் தலை, மூக்கு உள்ளிட்ட பகுதிகள் படுகாயம் ஏற்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை, அக்கம், பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அபிதா ஸ்ரீ சிகிச்சைபலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.