திருமலை: ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், மதனப்பள்ளி மதனப்பள்ளி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டு பல கோப்புகள் எரிந்தன. இந்த வழக்கில் அப்போதைய ஆர்டிஓ முரளி தான் முக்கிய காரணம் என்பதை அறிந்த சிறப்பு விசாரணை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் அரசு நிலம் பலருக்கு பட்டா போட்டு தரப்பட்டது.
இது தொடர்பான ஆவணங்களை அவர் எரித்ததாக போலீசார் குற்றம் சாட்டினர். இதுகுறித்து சி.ஐ.டி டி.எஸ்.பி வேணுகோபால் கூறுகையில், ‘ முன்னாள் அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டிக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் ஆர்டிஓ முரளி, முந்தைய கோப்புகளை அழித்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக உள்ளார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரின் தனிச் செயலாளர் முனித்துக்காராம் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்றார்.