கொல்கத்தா: சர்வதேச இதழான ஹெர்படோசாவாவில், ஆந்திர மாநிலத்தில் புதிய ஸ்லென்டர் கெக்கோ இனத்தை சேர்ந்த பல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் ஐதராபாத்தில் உள்ள நன்னீர் உயிரியல் பிராந்திய மையம், கொல்கத்தாவில் உள்ள ரெப்டிலியா பிரிவு மற்றும் ஒடிசாவின் பக்கீர் மோகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் குழுக்களின் கூட்டு முயற்சியாகும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கெக்கோ ஹெமிபிலோடாக்டைலஸ் இனத்தை சேர்ந்ததாகும். ஆந்திராவின் சேஷாசலம் உயிர்க்கோள காப்பகத்திற்குள் உள்ள திருமலைத் தொடரில் இவை காணப்பட்டுள்ளது.
+
Advertisement


