ஆந்திராவில் நடந்த ஜில்லா பரிஷத் இடைத்தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி சொந்த ஊரில் டெபாசிட் இழந்த ஒய்எஸ்ஆர் காங். கட்சி: 6,735 வாக்குகள் பெற்று தெலுங்கு தேசம் வெற்றி
திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த தொகுதியான புலிவேந்துலாவில் கடந்த 11ம் தேதி ஜில்லா பரிஷத் இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டெபாசிட் இழந்தார். தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் மாரெட்டி லதா ரெட்டி 6,735 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஹேமந்த் ரெட்டி 685 வாக்குகளை மட்டுமே பெற்று தொகுதியில் டெபாசிட்டை இழந்தார். சொந்த தொகுதியில் டெபாசிட்டை இழந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குறித்து சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்கிறார்கள்.
இதையடுத்து வெற்றி பெற்ற மாரெட்டி லதா ரெட்டி தேர்தல் அதிகாரியிடமிருந்து அதிகாரப்பூர்வ வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார். இதற்கிடையே இந்த தேர்தல் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: ராஜசேகர் ரெட்டி முதல்வரான பிறகு புலிவெந்துலா தொகுதியில் ஜனநாயகம் சீர்குலைக்கப்பட்டது.தற்போது ஜில்லா பரிஷத் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றது என்றார்.