அமராவதி: ஆந்திராவின் அல்லூரி சீதா ராமராஜூ மாவட்டம் மாரேடுமில்லி பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து நேற்று முன்தினம் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் தலைக்கு ரூ.1.5 கோடி அறிவிக்கப்பட்ட உயர்மட்ட மாவோ தலைவர் ஹிட்மா (53) அவரது மனைவி உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த தேடுதல் வேட்டையின் 2ம் நாளான நேற்றும் வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்களுடன் போலீசார் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் மேலும் 7 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக விஜயவாடாவில் உளவுத்துறை ஏடிஜிபி மகேஷ் சந்திர லத்தா தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களில் 3 பேர் பெண்கள்.
+
Advertisement


