ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபக்காவில் உள்ள வெங்கடேஸ்வரர் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு!!
அமராவதி : ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபக்காவில் உள்ள வெங்கடேஸ்வரர் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். ஏகாதசியை முன்னிட்டு காசிபக்காவில் உள்ள வெங்கடேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் காயமடைந்து உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
