சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தீபாவளி பண்டிகையை ஒட்டி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் நிர்ணயித்துள்ளன. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசு உடனடியாக நிர்ணயிக்க வேண்டும்; அதையும் மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமங்களை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.