சென்னை: அன்புமணி தரப்பினர் சமூகவலைதளங்களில் ராமதாஸ் கொலை செய்யப்படுவார் என பதிவிட்டுள்ளதாக பாமக எம்.எல்.ஏ அருள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் ஒட்டுகேட்பு கருவி, சிசிடிவி பதிவுகள் அனைத்தும் அன்புமணியின் ஆதரவாளர்கள் வைத்துள்ளனர். காவல்துறையினர் இதில் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புமணி தரப்பினர் சமூக வலைதளங்களில் ராமதாஸ் கொலை செய்யப்படுவார் என பதிவு செய்கின்றனர். அவரை கொலை செய்யும் நிலைக்கு அன்புமணி ஆதரவாளர்கள் வந்துவிட்டனர். அவர்கள் மீதும் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.