சென்னை: அன்புமணியை நீக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என அன்புமணி ஆதரவாளர் கே.பாலு தெரிவித்துள்ளார். அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது கட்சி விதிகளுக்கு எதிரானது. பாமக விதிகளின்படி கட்சி நிர்வாக பணிகளை நிறுவனர் மேற்கொள்ள முடியாது. அன்புமணியை நீக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை. பாமக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மட்டுமே நிர்வாக பணிகளை மேற்கொள்ள முடியும். ராமதாஸ் அறிவிப்பு பாமகவை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது. ஆக.9ல் மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழுவில் பாமக தலைவர் அன்புமணியின் பதவியை நீட்டித்து தீர்மானம் போடப்பட்டது. பொதுக்குழு முடிவுகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
+
Advertisement