ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாமக தலைவர் அன்புமணி நேற்று முன்தினம் உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற நடைபயணத்தை மேற்கொண்டார். நேற்று ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைப் பகுதியில் நடைபயணத்தை மேற்கொண்ட அவர், கெலவரப்பள்ளி அணையில் நீர் வெளியேற்றப்படும் மதகுகளையும், அதிலிருந்து ரசாயன நுரை வெளியேறுவதையும் பார்வையிட்டார். இதைதொடர்ந்து அந்த பகுதியில் அன்புமணி தலைமையில், பசுமை தாயகம் அமைப்பினர் மற்றும் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், கர்நாடகா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கர்நாடகா அரசு, மனிதர்களையும், கால்நடைகளையும், விவசாய நிலங்களையும் பாழ்படுத்தும் விதமாக தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகளை திறந்து விடுவதை நிறுத்த வேண்டும். இதை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
+
Advertisement


