சென்னை: பாமக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற தலைப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்தை தொடங்க உள்ளார். நாளை தொடங்கி நவம்பர் 1ம் தேதி வரை நடைபெறும் இந்த நடைபயணம் திருப்போரூரில் தொடங்கி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.
அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ளும் இந்த பயணத்திற்காக ‘உரிமை மீட்க... தலைமுறை காக்க’ என்ற இலட்சினை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த இலட்சினையை அன்புமணி இன்று காலை அவரது சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பாமக சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிட்டார்.


