சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று பாமக மாநில பொருளாளர் திலகபாமா, நிருபர்களிடம் கூறியதாவது: பாமக பிரிந்து இரு அணிகளாக இருப்பதாக சிலர் கூறி வந்தனர். ஆனால் அது உண்மை இல்லை. அன்புமணி தலைமையில் இருப்பது தான் பாமக. அன்புமணி தலைமையில் தான் வருகிற சட்டமன்ற தேர்தலை கட்சி எதிர்கொள்ளும். அவரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும்தான் பாமக கொடியை பயன்படுத்த முடியும். அன்புமணி தலைவராக நீடிக்க கூடாது என்று சிலர் விரும்பினார்கள். அதனை நாங்கள் முறியடித்து இருக்கிறோம். கட்சியின் நிறுவனர் பதவியில் ராமதாஸ் தான் இருப்பார். நாங்கள் அவரை ஒதுக்கவில்லை. கட்சிக்கு தலைவர் என்ற முறையில் அன்புமணி கூட்டணி குறித்து முடிவு செய்வார். வேட்பாளர்களையும் அறிவிப்பார். கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட அருள் எம்எல்ஏ, கரூர் பாஸ்கர் ஆகியோரை தான் அன்புமணி நீக்கி இருக்கிறார். இவ்வாறு தெரிவித்தார்.
+
Advertisement