சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித் தொகை தரும் அன்புக் கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; தாய் நிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அண்ணாவின் பிறந்தநாள் இன்று. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நான் இருக்கிறேன், இனி கவலை வேண்டாம். திராவிட மாடல் என்றால் எல்லோருக்கும் எல்லாம். அரசியல் என்பது மக்கள் பணி, எங்களுக்கு சொகுசுக்கு இடமில்லை. திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் எல்லாம் வாக்கு அரசியலுக்காக செய்யவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
+
Advertisement