பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாத்திடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாத்திடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.