Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உயிரிழந்த மக்களின் ஆன்மா நடிகரை மன்னிக்கவே மன்னிக்காது என்று மக்கள் கூறுவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கரூர் கதறல் ஓலம் கேட்ட புல்லட்சாமி விஜயமானவரின் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்காம கைகழுவி விட்டதால் யூனியன் பிரதேச நிர்வாகிகள் ரொம்பவே சோகத்தில் இருக்காங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘புதுக் கட்சியை தொடங்கிய விஜயமான நடிகர் தமிழகம் முழுக்க பிரசார திட்டம் வகுத்தாராம்.. கரூர் கதறல் ஓலத்தில் முடிய தலைநகருக்கு ஓட்டம் பிடித்து பதுங்கி விட்டாராம்.. ஒருசில நிர்வாகிகள் மீது கைது நடவடிக்கை பாய்ந்த நிலையில், முக்கிய நபரான புஸ்ஸி ஆனந்தமானவர் தலைமறைவாகவே உள்ளாராம்..

இருமாநில காக்கிகளும் யூனியனில் சல்லடை போட்டு வட்டம் அடித்தார்களாம்.. இது ஏமாற்றத்தில் முடிய, ஆனந்தமானவரோ முன்ஜாமீன் கேட்டு மனு போட்டுள்ளாராம்.. நிலைமை இப்படியிருக்க, யூனியனிலும் புதுமையான பிரசாரத்துக்கு வருகிற 11ம் தேதிக்கு அனுமதி கேட்டு ஆளும்தரப்பான புல்லட்சாமியிடம் ஆனந்தமானவர் தரப்பு மனு கொடுத்திருந்தார்களாம்.. இசிஆர் சாலை வழியாக வந்து ரோடு ஷோ நடத்தி சோனாம்பாளையம் சந்திப்பில் பேச அனுமதி கோரப்பட்டதாம்..

பின்னர் கடல்ஊர் மாவட்டத்துக்கு செல்லும் வகையில் விஜயமானவரின் பிரசார திட்டம் வகுக்கப்பட்டிக்க, தற்போது அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாம்.. கதறல் ஓலமிட்ட கரூரைவிட யூனியன் பகுதியானது மிகவும் குறுகலான சாலை வசதியை கொண்டது என்பதால் புல்லட்சாமி தரப்பு கைகழுவி விட்டதாம்.. இதனால் ரோடு ஷோ ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் நடிகர் கட்சியின் நிர்வாகிகள் சோகத்தில் மூழ்கியிருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மலராத கட்சியின் மாநில மாஜி ஆதரவாளர்கள் ஒருவருக்கும் தூங்கா நகரத்தில் பொறுப்புகள் இல்லையாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தூங்கா நகரத்து மலராத கட்சியில் என்னென்ன பொறுப்புகள் உள்ளதோ, அத்தனை பொறுப்புகளிலும் மாஜி காக்கிச் சட்டைகாரரின் ஆதரவாளர்கள் ஆக்கிரமித்திருந்தனராம்.. கட்சி பொறுப்பில் வேறு எந்த தரப்பும் நுழைந்து விடாத அளவுக்கு கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் மாஜி காக்கிசட்டைக்காரர் ரொம்பவே கவனமாய் இருந்துள்ளாராம்.. அவரது பதவி பறிபோகும் நேரத்தில் தூங்கா நகரத்து மாவட்ட தலைநகர நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டாங்க..

மாஜி போலீஸ்காரரின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு, கட்சியில் யாரிடமும் அவ்வளவாக பரிச்சயம் இல்லாதவர் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.. இவர் பொறுப்பேற்ற பிறகு, கட்சியில் உள்ள அனைத்து பிரிவுகளில் உள்ள நிர்வாகிகளை மாற்றம் செய்யும் பணி ஆரம்பித்தது. தற்போது அனைத்து பிரிவுகளிலும் நிர்வாகிகளின் நியமனமும் முடிந்துள்ளதாம்.. எந்த ஒரு பிரிவிலும் மாஜி காக்கி சட்டைக்காரரின் ஆதரவாளர் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லையாம்..

இதனால், மாஜி காக்கிச்சட்டை தரப்பில் பதவியை எதிர்பார்த்திருந்தவர்கள், பதவியை தக்க வைக்க நினைத்தவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒருவருக்கு கூட வாய்ப்பு கிடைக்காத நிலையில் தூங்கா நகரத்து மலராத கட்சியின் காக்கிச்சட்டை ஆதரவு தரப்பு ரொம்பவே அப்செட் ஆகியுள்ளனராம்.. இதுதொடர்பாக தேசிய தலைமைக்கும் சிலர் புகார்களை தட்டியுள்ளனராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘என்னை என்ன வேண்டுமாலும் செய்யுங்கள் என நடிகர் சொல்ல காரணம் டெல்லியிடம் அடைக்கலம் புகுந்தது தானாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கரூரில் அப்பாவி மக்கள் 41 பேரின் மரணத்திற்கு காரணமாக இருந்தும் அந்த நடிகர் கொஞ்சம் கூட மனம் வருந்தவில்லையாம்.. கூட்டத்திற்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் அதில் ஒன்றை கூட கேட்காமல் காற்றில் பறக்க விட்டுட்டாராம்.. சொகுசு பஸ்சில் ஜோராக வந்தவரை பார்க்க ரோடுகள்தோறும் மட்டுமல்லாமல் காடுகளில், வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் ஓடோடி வந்தாங்களாம்.. ஆனால் அந்த நடிகரோ பஸ்சின் ஜன்னலை மூடிக்கிட்டு போனதை எல்லாம் நாடே பார்த்து நகைச்சுக்கிட்டிருக்காம்..

அதுவும் பஸ் மிகவும் மெதுவாகவே சென்றதும் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் என்பது வெட்டவெளிச்சமாகி போனதாம்.. இத்தனை மக்கள் இறந்துபோன நிலையில் கூட கரூரிலேயே தங்கியிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்கூட சொல்லாமல் சென்னைக்கு ஓட்டம் பிடிச்சிருக்காரு.. ஆனால் இந்த துயர சம்பவத்தை கேள்விப்பட்டதும், கண்விழித்துக்கொண்டிருந்த முதல்வரோ நள்ளிரவு என்றும் பாராமல் கரூருக்கு ஓடிவந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லியிருக்காரு..

இறந்து போனவர்களுக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்யணுமோ அத்தனையும் செய்து, மக்களை அமைதிப்படுத்தும் வேலையை செஞ்சதோடு வேதனையோடு தவித்துக்கொண்டிருந்த நாட்டு மக்களுக்கு ஆறுதலாக இருந்திருக்காரு... ஆனால் அந்த நடிகரோ 3 நாட்களுக்கு பிறகு வீடியோ ஒன்றை வெளியிட்டு, கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல், என்னோடு மோதிப்பார் என சவால் விடுவது, உயிரிழந்த மக்களின் ஆன்மா அந்த நடிகரை மன்னிக்கவே மன்னிக்காது என்றும் மக்கள் சொல்றாங்க..

இவ்வளவு பெரிய கொடூர சம்பவம் நடந்தும் கொஞ்சம் கூட, எந்தபாகுபாடும் பார்க்காமல், நடிகர் மீது எந்த குற்றத்தையும் சொல்லாத முதல்வர், ஆணையத்தை அமைத்து அதன்பிறகு விசாரணை நடக்கும் என பெருந்தன்மையோடு சொல்லியிருக்காரு.. இவ்வளவு பெருந்தன்மையோடு செயல்பட்ட முதல்வரையே வந்து பார் என வீடியோ வெளியிட்டுள்ளது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்காம்.. அவர் நடத்திய ஒவ்வொரு கூட்டங்களிலும் மக்கள் மயங்கி விழுந்து இன்னும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்களாம்..

அந்த விவரம் கூட தெரியாத நடிகரோ, சினிமா கனவுலகிலேயே மிதந்துக் கிட்டிருக்காராம்.. அவரது நாடகத்திற்கு சான்றாக அவர் வெளியிட்ட வீடியோவில், காக்கா கதறுது.. அதிலும் கூட அவர் மக்களை ஏமாற்றும் வேலையை தான் செஞ்சியிருக்காருன்னு பொதுமக்கள் வேதனையோடு சொல்றாங்க... அவர் மனம்வருந்த மாட்டார், திருந்த மாட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுடன் சேர்ந்து ஆறுதல் சொல்லமாட்டார்..

அந்த நடிகரை பழிவாங்க வேண்டும் என அரசு நினைத்திருந்தால் முதல்நாளே அவரை ஜெயிலுக்கு அனுப்பியிருப்பார்கள்.. ஆனால் அந்த சிந்தனை கூட இல்லாமல் இருந்த முதல்வரை அவதூறு செய்வது என்பதை இந்த சமூகம், நடிகரை ஒருபோதும் மன்னிக்காது என பொதுமக்கள் கருத்துக்களை சொல்றாங்க... அதே நேரத்தில் அந்த நடிகர் தற்போது டெல்லியிடம் அடைக்கலம் புகுந்துட்டாராம்.. அதனால் தான் சவால் விடுகிறாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.