இந்திய கடற்பகுதியில் மூன்று சுழற்சிகள் ஒன்றாக காணப்படுகின்றன :வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா பேட்டி
சென்னை : தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா செய்தியாளர் சந்திப்பில், "இந்திய கடற்பகுதியில் மூன்று சுழற்சிகள் ஒன்றாக காணப்படுகின்றன. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமான பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுவடையக் கூடும்,"இவ்வாறு தெரிவித்தார்.



