பதேஹர்: பஞ்சாபின் அமிர்தசரஸில் இருந்து அமிர்தசரஸ்-சஹர்சா கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டு இருந்தது. காலை 7.30மணியளவில் ரயில் சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே சென்றபோது ஏசி பெட்டியில் இருந்து புகை வந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு பெட்டிகளிலும் தீப்பிடித்தது. உடனே அனைத்து பயணிகளும் வெளியேறினார்கள். ஒரு பெண் பயணிக்கு மட்டும் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டது. ரயிலில் தீப்பிடித்த மூன்று பெட்டிகளும் மற்ற பெட்டிகளில் இருந்து பிரிக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகின்றது.
+
Advertisement