Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமமுகவும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக செல்ல முடியாது: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டம்

சென்னை: அமமுகவும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக செல்ல முடியாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; எதைச் சொன்னாலும் எடப்பாடி பழனிசாமி பொய்தான் சொல்வார். பழனிசாமியின் முகம் வாடியுள்ளது; அவரை அப்படியே விட்டு விடுங்கள். 2011 டிசம்பரில் நான் உள்பட சிலர் கட்யில் இருந்து நீக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. சசிகலா பெங்களூரு சென்ற பிறகே அனைவரும் சேர்ந்து என்னை கட்சிக்குள் கொண்டு வந்தனர். எடப்பாடி உள்ளிட்டோர் சேர்ந்துதான் என்னை துணைப் பொதுச்செயலாளராக நியமிக்க கூறினர். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை, சசிகலா கூறியதால் போட்டியிட்டேன்.

முதலமைச்சர் பதவிக்கு நான் நிற்பேன் என எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்தது. மற்றவர்களை முதலமைச்சராக்கக் கூடிய இடத்தில் இருந்தேன். எடப்பாடி பழனிசாமியை எம்.எல்.ஏக்கள் பலர் முதலமைச்சராக்க ஒப்புக் கொள்ளாமல் தப்பி ஓட முயற்சித்தனர், அவர்களை பாதுகாத்துதான் பழனிசாமியை முதலமைச்சராக்கினோம். அதிமுகவுக்கோ, பழனிசாமிக்கோ வாக்கு கேட்பேன் என நான் கூறவில்லை. அமமுகவும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக செல்ல முடியாது. என்.டி.ஏ. கூட்டணி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அவரை ஏற்க மாட்டோம்.

எடப்பாடி பழனிசாமி தன்னைப் பார்க்கவே தயங்குவார். எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செல்ல வேண்டும் என்பது தற்கொலைக்குச் சமம். எடப்பாடி டெல்லியில் பென்ட்லி காரில் யாருடன் சென்றார் என்பது எனக்கு தெரியும். கூட்டணியில் பழனிசாமிதான் முடிவெடுப்பார் என நயினார் கூறியதால் வெளியேறிவிட்டோம். என்று கூறினார்.