அண்ணாநகர்: திருவாரூர் மாவட்டம் கோவிலூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (48). இவர், சென்னை நொளம்பூர் ரெட்டிபாளையம் பகுதியில் மீன் கடை நடத்தி வந்தார். கடந்த 2023ம் ஆண்டு மீன் கடையில் தனியாக இருந்தபோது, காரில் வந்த கும்பல், ஜெகனை சரமாரியாக வெட்டி கொன்றது. இதுகுறித்து நொளம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து, 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலைக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர், சிங்கப்பூரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நொளம்பூர் போலீசார், அந்த நபருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து, அனைத்து விமான நிலையம் மற்றும் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில், குமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், சிங்கப்பூர் புவனேஸ்வர் விமான நிலையத்தில் வைத்து குமாரை அதிகாரிகள் கைது செய்து, நொளம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து புவனேஸ்வர் ஏர்போர்ட்டுக்கு நொளம்பூர் போலீசார் சென்று குமாரை கைது செய்தனர்.