சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை: வரும் சட்டப் பேரவை தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 10ம் தேதி (புதன்கிழமை) முதல் 18ம் தேதி (வியாழக்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை அடையாறில் அமைந்துள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.
விருப்ப மனு கட்டணமாக ரூ10,000; புதுச்சேரியில் போட்டியிட விரும்புவோர் ரூ.5,000 கட்டணம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் ஜனவரி 3ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 3ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்ற பிறகு, பிப்ரவரியில் கூட்டணி பேச்சுதொடங்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

