புத்தகரம் முத்து கொளக்கி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல எந்த தடையும் இல்லை: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் புத்தகரம் முத்து கொளக்கி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல எந்த தடையும் இல்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாகுபாடு காட்டப்படவில்லை என்ற அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரசு அறிக்கையின் படி வெள்ளோட்டம், தேரோட்டம் ஆகியவற்றை நடத்தவும் இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கோயிலுக்குள் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை என செல்வராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பிற ஜாதிகளை சேர்ந்த மூவரின் தூண்டுதலின் பேரில் பூஜைகளில் பட்டியலின மக்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை எனவும் தேரோட்டத்தின் போது பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு தேர் வரவிடாமல் தடுக்கின்றனர் எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

