Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமித்ஷா தனது நாவை அடக்கி பேச வேண்டும்: வைகோ எச்சரிக்கை

மதுரை: ‘அமித்ஷா தனது நாவை அடக்கி பேச வேண்டும்’ என வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திமுகவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அமித்ஷா திமுகவை உடைத்து, துடைத்து எறிவோம் என பேசுகிறார். அமித்ஷாவை விட 100 மடங்கு சக்தி கொண்டவர்களாலேயே திமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை. திமுக ரத்த தியாகத்தில் வளர்க்கப்பட்ட எக்கு கோட்டை. அமித்ஷா தனது நாவை அடக்கி பேச வேண்டும். மற்ற அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்யும்போது மிக கவனத்துடன் பேச வேண்டும். ஒன்றிய அரசு திட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்து இந்தியாவை துண்டாட பார்க்கின்றனர். இந்தியாவிற்கு பாரத் என பெயர் சூட்ட பாஜ நினைக்கிறது. திமுக கூட்டணியில் சிறு சலசலப்பு கூட கிடையாது. திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எஸ்ஐஆர் ஐ வைத்து தமிழ்நாட்டில் 75 லட்சம் வாக்குகள் நீக்கப்பட உள்ளது. அதே எஸ்ஐஆர்ஐ வைத்து 65 லட்சம் வெளிமாநில வாக்குகளை தமிழ்நாட்டில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

* ‘காகித கப்பலில் கரையை கடக்க முயல்கிறார் விஜய்’

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஆசை, கனவு எனக்கு கிடையாது. நான் என்றும் முதல்வர் ஆவேன் என பேசியதில்லை. ஆனால், விஜய்யின் கனவு நிறைவேறாது. காகித கப்பலில் கரையை கடக்க முயல்கிறார் விஜய். ஆகாய வெளியில் மனக்கோட்டையை கட்டுகிறார் விஜய். அது வெறும் மண் கோட்டையாக தான் போகும்’ என்று வைகோ தெரிவித்தார்.

* ‘நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிகார வரம்பை மீறி பேசுகிறார்’

‘நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிகார வரம்பை மீறி பேசுகிறார். நீதிபதிகளை நான் மதிக்கிறேன், ஆனால் நீதிபதிகள் வரம்புக்குள் மட்டுமே பேச வேண்டும். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என மிரட்டுகிறார். இந்த உத்தரவு ஜனநாயகத்துக்கு விரோதமானது. தமிழ்நாட்டில் இந்துத்துவா சக்திகள் உள்ளே நுழைய நினைக்கிறது. தமிழ்நாட்டில் எந்த காலகட்டத்திலும் எந்த சக்தியும் நுழைய முடியாது’ என்று வைகோ தெரிவித்தார்.