பெங்களூரு: இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நக்சலிசத்திற்கு ஆதரவானவர் என அமித்ஷா கூறியதற்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதினார். இந்நிலையில், பெங்களூருவில் வழக்கறிஞர்கள் மாநாட்டில் உரையாற்ற வந்த ஒன்றிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: சில ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்துறை அமைச்சருக்கு எதிராக கையெழுத்து பிரசாரம் நடத்தி கடிதம் எழுதி உள்ளனர். இது நல்லதல்ல. துணை ஜனாதிபதி தேர்தல் ஒரு அரசியல் விவகாரம். அதில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏன் தலையிட வேண்டும்? இதன் மூலம் அவர்கள் நீதிபதிகளாக இருந்த போதும் தனிப்பட்ட சித்தாந்தத்தை அவர்கள் கொண்டிருந்தார்கள் என்ற தோற்றத்தை இது தருகிறது. அரசியலமைப்பு பதவியில் இருப்பவருக்கு எதிராக இதுபோன்ற பிரசாரங்கள் சரியானதல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
+
Advertisement