இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரை அமித் ஷாவுக்கு அவுட்சோர்சிங் செய்த மோடி: காங்கிரஸ் கடும் தாக்கு
புதுடெல்லி: மணிப்பூர் மாநில உதயமான தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “மணிப்பூர் மாநில தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்தது அனுப்பி உள்ளார். இது வெறும் வெற்று வார்த்தைகள். அவரது பாசாங்குதனத்தை காட்டுகிறது. உலகம் முழுவதும் செல்லும் பிரதமர் மோடிக்கு மணிப்பூர் சென்று அம்மாநில மக்களை சந்திக்க ஆர்வம் இல்லாததால், நேரம் கிடைக்கவில்லை.
மணிப்பூர் விவகாரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவுட்சோர்சிங் செய்திருப்பது மோடி பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு சமம். இது மணிப்பூரில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது” என்று குறிப்பிட் டுள்ளார்.


