நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நயாகரா நீர்வீழ்ச்சியை காண பேருந்தில் சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள், சீனர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். இந்த பஸ் நியூயார்க் நகருக்கு திரும்பி கொண்டிருந்தது.
பஃபலோவில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள பெம்ப்ரோக் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த பேருந்து திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியாகினர். இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர்.