வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் பகுதியில் இரு இடங்களில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். பின்னர் அந்த நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு 3 பேர் இறந்து கிடந்தனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில், துப்பாக்கி சூடு நடத்தியவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்தவர் என்பது தெரியவந்தது. துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த மாதம் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து, வாகன நிறுத்துமிடத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.