வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் அடுத்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும். இந்த மசோதா 3 முறை தோற்றதால், அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் தற்போதைய நிலை வரும் நவம்பர் 21 வரை தொடர எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து 4வது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போதும் 54-44 என்ற கணக்கில் மசோதா நிறைவேறவில்லை.