பெய்ஜிங் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியப்போவதில்லை என்று அறிவித்துள்ள சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா எண்ணெய் இறக்குமதியை தொடர்கிறது. இதனால் அமெரிக்க, சீன வர்த்தக பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்ற பிறகு, சீனா உட்பட பல்வேறு நாடுகள் மீது புதிய வரி விதிப்புகளை அறிவித்தார். சீனா மீது 34% வரியை விதித்தார். இதற்கு பதிலடியாக அமெரிக்கா மீது சீனாவை வரியை விதித்தது. கடந்த ஜூன் மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங்-கும் அமெரிக்க அதிபர் டிரம்பும் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியதில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த வரி போர் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
இதற்கிடையே ஈரான், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை சீனா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரியது. ஆனால் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியப்போவதில்லை என்று அறிவித்துள்ள சீனா, ஈரான், ரஷ்யா எண்ணெய் இறக்குமதியை தொடர்வதாக அறிவித்துள்ளது. தனது தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்யும் என்று சீனா தெரிவித்துள்ளது. சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 2 நாட்கள் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு பின் சீனா மீது 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு பதிலடி தரும் வகையில், ஈரான் மற்றும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறித்த அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது.