அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் தோல் பொருள்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகிறது: வணிகர் சங்க தலைவர் கே.ஆர்.விஜயன் பேட்டி
அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் தோல் பொருள்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகிறது என கே.ஆர்.விஜயன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,
ஏற்றுமதியாகும் தோல் பொருள்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி
அமெரிக்காவின் 50% வரியால் ஏற்கனவே ஆர்டர் கொடுத்த வணிகர்கள், தோல் பொருள்களின் விலையை குறைக்க சொல்வதாக உற்பத்தியாளர்கள். பாதிப்பை சமாளிக்க ஒன்றிய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என அகில இந்திய தோல் பதனிடுவோர், வணிகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
50% வரி - ரூ.17,000 கோடி தோல் பொருள்கள் ஏற்றுமதி பாதிப்பு
அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் தமிழ்நாட்டில் தயாராகும் ரூ.17,000 கோடி தோல் பொருள்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் ரூ.43,000 கோடி மதிப்புள்ள தோல் பொருள்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகின்றன.
1 லட்சம் தோல் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்
அமெரிக்காவின் வரி விதிப்பால் தோல் பொருள்கள் உற்பத்தித் துறையில் பணியாற்றும் 1 லட்சம் பேர் வேலையிழக்கும் ஆபத்து உள்ளது. தோல், தோல் அல்லாத காலணிகள் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கும் பணியில் 2 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதுடன் தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்குவதும் தள்ளிப் போகும்.
தோல் பொருள் உற்பத்திக்கு ஒன்றிய அரசு மானியம் தர கோரிக்கை
தோல் பொருள் தயாரிப்புக்கு ஒன்றிய அரசு மானியம் வழங்க அகில இந்திய தோல் பதனிடுவோர், வணிகர் சங்க தலைவர் கே.ஆர்.விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க இழப்பீடு வழங்கவும் தோல் பொருள் உற்பத்தியாளர்கள் கோரிக்கை.