Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவில் இருந்து 3258 இந்தியர்கள் நாடு கடத்தல்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்

டெல்லி: 2025 ஜனவரி முதல் தற்போது வரை அமெரிக்காவில் இருந்து 3258 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 1368 பேர் நாடு கடத்தப்பட்ட நிலையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகளை ட்ரம்ப் தீவிரப்படுத்தியதால் இந்தாண்டு எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 2009ல் இருந்து மொத்தம் 18,822 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.