அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற திறமையான புலம்பெயர்ந்தோர்கள் தேவை; எச்1 பி விசாக்களுக்கு டிரம்ப் மீண்டும் ஆதரவு
வாஷிங்டன்: வாஷிங்டனில் அமெரிக்கா-சவுதி முதலீட்டு கூட்டம் நடந்தது. இதில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியதாவது:
உயர் தொழில்நுட்ப தொழிற்சாலைகளில் அமெரிக்க தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவிற்கு தேவை. அந்த மக்கள் நம் மக்களுக்கு ‘சிப்’ எவ்வாறு தயாரிப்பது என்பதை கற்று கொடுக்க போகிறார்கள். நான் பழமைவாத நண்பர்களை ஆதரிக்கிறேன். அமெரிக்காவை மேலும் சிறந்ததாக்க விரும்புகிறேன்.
அமெரிக்காவில் தொழிற்சாலைகளை கட்டும் வெளிநாட்டு உரிமையாளர்கள் ஆயிரக்கணக்கான மக்களை அவர்களுடன் அழைத்து வர வேண்டியிருக்கும். அந்த மக்களை வரவேற்க போகிறேன். பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் மக்கள், அந்த ஆலையை திறந்து, இயக்க மற்றும் வேலை செய்ய தங்கள் நாட்டில் இருந்து நிறைய பேரை அழைத்து வர அனுமதிக்காவிட்டால், நாங்கள் வெற்றிபெற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
எச்-1பி விசாக்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் தகுதிவாய்ந்த அமெரிக்க குடிமக்கள் நிரப்ப கடினமாக இருக்கும் நிலையில், சிறந்த வெளிநாட்டினரை பணி அமர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ளன. இந்த விசாவுக்கு சமீபத்தில் அதிபர் டிரம்ப் கட்டணத்தை உயர்த்திய நிலையில், புலம்பெயர்ந்தோர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.


