வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் ஆளுநர் பதவிக்கு போட்டியிடவுள்ள விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியை அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரித்துள்ளார். இளமையான, வலிமையான மற்றும் புத்திசாலியானவர் என விவேக் ராமசாமிக்கு டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். அடுத்தாண்டு மே மாதம் நடைபெறவுள்ள ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் விவேக் ராமசாமி போட்டியிடுகிறார். டிரம்ப் ஆதரவாளரான விவேக் ராமசாமி DODGE துறையின் இணை தலைவர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.
+
Advertisement

