Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அமெரிக்காவில் பாரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு: 20 பேர் காயம்!

தெற்கு கரோலினா: அமெரிக்காவில் பாரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் சமீபகாலமாக அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கால்பந்து மைதானம் மற்றும் பள்ளி என இருவேறு வேறு இடங்களில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் செயின்ட் ஹெலினா தீவு பகுதியில் உணவு விடுதியுடன் கூடிய பார் ஒன்று உள்ளது. இதில், மதுபானங்களுடன் உணவு வகைகளும் விற்பனை செய்யப்படும்.

இந்த நெரிசலானா பாரில் நுழைந்த மர்மநபர் ஒருவர் தீடிரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இதில் பலர் பலத்த காயமடைந்தனர். துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதும் பாரில் இருந்தவர்கள் அலறியடித்து தப்பியோடினார்கள். சம்பவம் நடந்தபோது, நூற்றுக்கணக்கானோர் அந்த பாரில் இருந்துள்ளனர். அவர்களில் பலர் அடைக்கலம் தேடி, அருகேயுள்ள கடைகளுக்குள்ளும், கட்டிடங்களுக்கு உள்ளேயும் புகுந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.