அமெரிக்க மத்திய வங்கி கவர்னர் லிசா குக்கை பதவி நீக்கம் செய்யும் டிரம்பின் முயற்சியை நிராகரித்தது நீதிமன்றம்!!
வாஷிங்டன் : அமெரிக்க மத்திய வங்கி கவர்னர் லிசா குக்கை பதவி நீக்கம் செய்யும் டிரம்பின் முயற்சியை நிராகரித்தது நீதிமன்றம். லிசா குக்கை பதவி நீக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய வங்கி தொடங்கி 112 ஆண்டில் கவர்னரை நீக்க அனுமதி கோரி அதிபர் மனு செய்வது இதுவே முதல்முறை ஆகும். நீதிமன்ற உத்தரவை அடுத்து இன்று, நாளை நடைபெறும் மத்திய வங்கி நிதிக்கொள்கை கூட்டத்தில் லிசா பங்கேற்பார்.