திருப்பத்தூர்: ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேரை விடுதலை செய்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மொத்தம் பதியப்பட்ட 7 வழக்குகளில், 5 வழக்குகளில் 161 நபர்கள் விடுதலை செய்துள்ளது. 2015-ல் ஆம்பூரில் நடந்த கலவர வழக்கில் 191 பேர் கைது செய்யப்பட்டனர். 191 பேர் மீதான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சமீர் அகமது பாஷா உயிரிழந்ததால் வன்முறை வெடித்தது.
+
Advertisement