அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் புழல் கேம்ப் சாலை சந்திப்பு அருகில் அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களின் செயலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மர்ம நபர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் நடவடிக்கைகளை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது. அம்பேத்கரை மதிக்கும் பொதுமக்களின் மனஉளைச்சலை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற செயற்பாடுகளுக்கு முடிவு கட்ட இயலும்.